For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்க: பிரதமருக்கு ஜெ கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கச்சத்தீவு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

katcha Theevu issue : Jaya letter to Modi

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

கச்சத்தீவு ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததற்கு ஆவண சான்றுகள் உள்ளது. 1974, 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவு இலங்கைக்கு இந்தியாவால் தாரைவார்க்கப்பட்டது.

அரசியல் சட்டதிருத்தம் இல்லாமல் கச்சத்தீவை இலங்கைக்கு அளித்தது செல்லாது. எனவே கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். ஆனால், கச்சத்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை என மத்திய அரசு கூறுவது அதிர்ச்சியளிக்கிறது.

கச்சத்தீவு தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த பதில் மனுவில் கச்சத்தீவு கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு உரிமையில்லை என இந்திய-இலங்கை இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தது. இதனையடுத்து திருத்தப்பட்ட புதிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

English summary
Reclaiming the Kachatheevu is the only solution to save our fishermen, said CM Jayalalitha to PM Modi in a letter.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X