அப்போ குஷ்பு... இப்போ கீர்த்தி சுரேஷ்... - இதுவும் கடந்து போகும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை துவக்க விழா இன்று நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்திசுரேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றியும், ரிப்பன் வெட்டியும் தொடங்கிவைத்தார். அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டதால் போலீஸ் தடியடி நடத்தியது டுவிட்டரில் இதுபற்றி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

சேலம் வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் நகைக் கடைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசத் தொடங்கினார். அவரைக் காண வந்த ரசிகர்களால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் கூட்டத்தினரை விரட்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது, எனினும் கீர்த்தி சுரேஷ் காரை விரட்டிக்கொண்டு ரசிகர்கள் ஓடினர்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசப்படும் செய்தியாகியுள்ளது. பலர் கிண்டலாகவும், விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர். குஷ்பு தொடங்கி கீர்த்தி சுரேஷ் வரை இன்னும் எத்தனை நாயகிகளுக்காக தமிழக ரசிகர்கள் தடியடி வாங்கப் போகிறார்களோ?

குவிந்த கூட்டம்

கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அவரது புகைப்படத்தைப் பதிவிட்டு தேவதையைக் கண்டேன் என்கிற ரேஞ்சுக்கு பகிர்ந்துள்ளனர்.

என்று தணியும்?

சேலத்தில் கீர்த்தி சுரேஷ் ! ரசிகர்களால் திணறிய காவல் துறை ! என்று தனியும் எங்கள் இளைஞர்களின் சினிமாக்காரிகள் மீதான மோகம் !

காலம் கடந்து போகும்

ஒரு காலத்தில் குஷ்புவுக்கு கோவில் கட்டி ஆராதித்த கூட்டம் நக்மா... திரிஷா... இப்படியே... போய்.... கீர்த்தி சுரேஷ்.... காலம் கடந்து போகும்..

கீர்த்தி சுரேஷ் ஆய்வு

சேலத்தில் விவசாய ஆதரவு போராட்டம். வாகன நெரிசல். விவசாயி கீர்த்தி சுரேஷ் ஆய்வு.

இன்னும் திருந்தலையா?

அட முட்டாள்கள இன்ணும் நீங்க திருந்தலையாட ,நடிகை கீர்த்தி சுரேஷ் பார்க்க கூடிய கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Keethi Suresh Salem opening jewellery shop crowd police resorted to mild baton charge to disperse the people.
Please Wait while comments are loading...