நெல்லையில் நிறம் மாறிய குளம்.. கேரள குப்பைகள் தான் காரணம்.. பொது மக்கள் குற்றச்சாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை அருகே குளத்தில் நிறம் மாறியுள்ளதால் அப்பகுதி மக்கள் குளத்தை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள பெரியகுளம் கடந்த வடகிழக்கு பருவமழையால் நிரம்பி உள்ளது. இந்த குளத்தை பாசனத்திற்கு மட்டுமின்றி நாங்குநேரி, மறுகால்குறிச்சி, நம்பிநகர், இளம்தோப்பு, தம்புபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் குளிக்கவும், துணி துவைக்கவும், கால்நடைகளை குளிப்பாடவும் பயன்படுத்தி வந்தனர்.

Kerala uses Thirunelveli pond as Dust-Bin

இந்நிலையில் கடந்த சில நாட்களாக குளத்தில் குளிக்க செல்லும் பொது மக்களுக்கு தோலில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டு குளத்திற்கு செல்லவே அஞ்சுகின்றனர். மேலும் தண்ணீர் வழக்கிற்து மாறாக தூர்வாசனை வீசுகிறது.

இது தொடர்பாக பொது மக்கள் கலெகடர் மற்றும் அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். தொழிற்சாலை கழிவுகளை குளத்தில் மறைமுகமாக கலந்து விட்டதாகவும், அதனால் பெரியகுளத்தில் தண்ணீர் கெட்டு போனதாகவும், அப்பகுதியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டி குளம் அமைந்திருப்பதால் தனியார் லாரிகள் கேரள கழிவுகளை குளத்தில் கொட்டி போயிருக்கலாம் என்றும் அப்பகுதியினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இப்படி குளத்தில் அசுத்தம் செய்பவர்களை உடனடியாக விசாரணை செய்து பிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kerala usesThirunelveli pond as Dust-Bin. People says Kerala made Thirunelveli pond very worst.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற