For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடிய விடிய குலவை... ஆட்டு ரத்தத்தில் குளித்த பூசாரி... நெல்லை அருகே பரவசம்!

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே கோயில் கொடை விழாவில் பூசாரி ஆ்ட்டு ரத்தத்தில் குளித்தார். இதனை பார்த்த பக்தர்கள் பரவசத்தில் பக்தி கோஷம் எழுப்பினர்.

நெல்லை அருகே கங்கைகொண்டானில் உளளது ராஜபதி சுடலைமாடசாமி கோயில். இதையொட்டி மாரியம்மன் கோவிலும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் கடைசி வாரம் இண்டாம நாள் இந்த கோயிலில் கொடை விழா நடக்கும். நெல்லையிலிருந்து மதுரை செல்லும் சாலையில் கஙகைகொண்டான் உளளது.

Kodai vizha lures thousands near Nellai

அங்குளள கங்கைகொண்டான் ராஜபதிக்கு வெள்ளைக்காரர் ஒருவர் குதிரையில் வந்தாராம். அப்போது கோயிலில் உள்ள சப்பாணி மாடசாமி சிரித்துள்ளார். இதனால் கோபம் கெ்ாண்ட வெள்ளைக்காரர் துப்பாக்கியால் சுவாமியை சுட்டாராம். அப்போது கலங்கரை சுவாமி அந்த வெள்ளைக்கார துரையை கொன்று அவரது ரத்தத்தை குடித்தாராம். அவரை கொன்ற இடம் இன்றும் குதிரை மதகு என்ற பெயரில் உள்ளது. அதேபோல் கொல்லப்பட்ட வெள்ளைக்காரரின் சமாதியும் கோயில் அருகே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வரலாற்றை மையமாக வைத்தே ஒவ்வொரு ஆண்டும் கோயில் கொடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த கோயிலில் முக்கிய அம்சம் ரத்த குளியலும், மண்டை ஓடு பிரசாதமும் தான். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்வர்.

இந்த ஆண்டுக்கான கோயில் கொடை விழா இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை நடந்தது. இதையடுத்து ரத்த குளியலுக்கான குழி தோண்டப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தண்ணீரால் நிரப்பப்பட்டது. தொடர்நது ஆடுகள் பலியிடப்பட்டு அந்த ரத்தம் முழுவதும் குழியில் நிரப்பப்பட்டது. இந்த குழியில் சாமியாடி இறங்கும் முன்பாக ஆட்டு ரத்தத்தை குடித்தார். இதை தொடர்நது குழிக்குள் இறங்கிய பூசாரி ஆட்டு ரத்தத்ததில் குளித்தவாறு அதன் உள்ளே மூழ்கி அடியில் வைக்கப்பட்டிருந்த ஆட்டின் தலையை வெளியே எடுத்தார்.

பின்னர் அனைத்து ஆடுகளின் தலைகளையும் ஒவ்வொன்றாக எடுத்து வைத்தார். ரத்த குளியலை முடித்து வெளியே வந்த பூசாரியிடம் மண்டை ஓடு கொடுக்கப்பட்டது. மண்டை ஓடடில் பச்சரிசி வெல்லம், கதலி பழம் கலந்து வைக்கப்பட்டிருநதது. இந்த நிகழ்ச்சியை அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர். நளளிரவு அந்த பிராந்தியம் முழுவதும் குலவை சத்தமும், மேளசத்தமும் அதிர வைத்தது. இந்த நிகழ்ச்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

English summary
A Kodai vizha in the Rajapathi Sudalai Madasamy temple lured thousands of devottees near Nellai ysterday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X