கொடநாடு கொலை.. வலுக்கும் சந்தேகம்.. விபத்தில் சிக்கிய சயான் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுக்காயம்
கொடநாடு காவலாளி கொலை வழக்கு தொடர்புடையை சயான் என்பவரிடம் கேரளா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கொட நாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி சயான் கார் விபத்தில் படுகாயமடைந்தனர். விபத்தில் பலியான அவரது மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் உள்ளதால் மேலும் சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க கேரளா போலீசார் கோவை வந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 23ம் தேதி நள்ளிரவில் காவலாளி ஓம்பகதூர் என்பவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். மேலும் கிஷன் பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்தார்.

இந்த கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் என்பவர் இன்று காலை சேலம் அருகே எடப்பாடியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக கேரளாவின் திருச்சூரை சேர்ந்த சயான் என்பவரும் பாலக்காடு அருகே டேங்கர் லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். அவர் கோவையில் உள்ள மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் சயானுடன் காரில் பயணித்த அவரது மனைவி வினுபிரியா, மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் பிரேதபரிசோதனையில் சயானின் மனைவி, குழந்தை கழுத்தில் வெட்டுகாயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளா போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சயானின் மனைவி, மகள் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெட்டுகாயம் குறித்து அறிய மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் கேரள போலீசார் விசாரணை துவக்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை வந்துள்ள கேரளா போலீசார், சிகிச்சை பெற்று வரும் சயானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவர், ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் சாலை விபத்தில் சிக்கியது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications