என்ன அநியாயம் .. ரேஷன் அரிசியை மாவாக்கி கடத்தல் 137 மாவுமூட்டைகள் பறிமுதல்.. மில் ஓனர்களுக்கு வலை
கோவில்பட்டி: கோவில்பட்டியில் இருந்து லாரிகள் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த 137 ரேஷன் அரிசி மாவு மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அரவை மில்களில் ரேஷன் அரிசியை மாவாக மாற்றி பல்வேறு இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியிலுள்ள மாவு அரவை மில்லுக்குள் சோதனை நடத்த சென்றர். அப்போது தனியாருக்கு சொந்தமான மில் ஒன்றில், ஊழியர்கள் ரேஷன் அரிசி மாவாக அரைத்து கொண்டிருந்தனர். இதையடுத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், அரிசி அரைத்துக் கொண்டிருந்தவர்களிடம், விசாரணையை துவங்கினர்.
அதில், வள்ளுவர்நகர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து, செக்கடித் தெருவில் உள்ள கண்ணன் ஆகியோரின் மில்களில் இவ்வாறு அரவை பணிகள் பல நாட்களாக நடந்து வருவதும், ரேசன் அரிசி மாவு அரைக்கப்பட்டவுடன், லாரி மூலம் மதுரைக்கு கடத்தி செல்லப்படுவதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்த 137ரேசன் அரிசி மாவு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை சுமார் 50 கிலோ கொண்டவை என கூறப்படுகிறது. அரிசி மாவு மூட்டைகளை போலீஸார், கைப்பற்றி உணவு பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் மில் உரிமையாளர்கள் கண்ணன் மற்றும் மாரிமுத்துவை தேடி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications