அசுரனை சூரசம்ஹாரம் செய்த திருச்செந்தூர் முருகப் பெருமான்.. லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர முழக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெற்று முடிந்துள்ளது. திருச்செந்தூர் முருகன் சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்தார். இதனை லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்து, அரோகரா முழக்கத்துடன் கண்டு களித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் இந்த விழாவுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30க்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. இறுதியாக மாலை 4.30க்கு திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்வை காண குவிதனர். அதிக அளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். அதேபோல கடலில் குளிக்கும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மொத்தம் 4500க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இதுதவிர 250க்கும் அதிகமான சிசிடிவி மூலம் பக்தர்களின் பாதுகாப்பை போலீசார் உறுதி செய்து வருகின்றனர்.
கூட்டம் அதிகளவில் இருப்பதால், தற்காலிகமாக 20 வாகன நிறுத்தங்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. கடற்கரையில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு மட்டுமே பக்தர்கள் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டது. 100 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் சூரசம்ஹாரம் செய்ய கடற்கரை நோக்கி சரண கோஷங்களுடன் படை பரிவாரங்களுடன் புறப்பட்டார் முருகப் பெருமான். அப்போது முருக பக்தர்களின் அரோகரா சரண கோஷங்களால் அதிர்ந்தது திருச்செந்தூர். அசுரன், மமதையுடன் முருகப் பெருமானை சுற்றி வலம் வந்தான்.
யானை முகத்தான் தாரகனை வதம் செய்த பின்னர் சிங்க முகத்தான் அசுரனை வதம் செய்வார் முருகப் பெருமான். மூன்றாவதாக ஆணவ வடிவிலான சூரபத்மனை வதம் செய்ய முருகனின் வீரவேல் புறப்பட்டது. அசுரன் சூரபத்மனை வதம் செய்தார் திருச்செந்தூர் முருகப் பெருமான். அசுரனை அழித்த முருகப்பெருமான் சந்தோஷ மண்டபத்துக்கு திரும்பினார்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications