தமிழக மீனவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழக மீனவர்கள் 13 பேர் கைது-வீடியோ

ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேருக்கு நவம்பர் 16 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது . ராமநாதபுரம், ஜெகதாப்பட்டினம் மீனவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள், அவர்களது இரு விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர்.

Lankan navy arrests 9 Tamil Nadu fishermen

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 4 மீனவர்களையும் அவர்களது ஒரு படகினையும் இலங்கைக் கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறை கடற்படை முகாமுக்கு கொண்டுசெல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டனர்.

மீனவர்கள் அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் 16ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து அனைவரும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Lankan navy arrests 9 Tamil Nadu fishermen

தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் செல்லும் நடவடிக்கை அன்றாடம் தொடர்ந்து நடந்துவருகின்றன. கடந்த வாரம் வரை 54 மீனவர்கள் இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அக்டோபர் 8ல் கைதான 10 காரைக்கால் மீனவர்களின் காவல் நவம்பர் 16 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 140-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டுள்ளது. சிறையில் உள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 2 நாள்களுக்கு முன் முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீண்டும் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Lankan navy has arrested 9 TN fishermen who were fishing near Neduntheevu Thursday morning.
Please Wait while comments are loading...