”பயிரை மேய்ந்த வேலி” – கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய விரிவுரையாளர்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கச்சிராப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனா.
19 வயதான இவர் சேலம் காரிப்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
ஆசிரியருடன் காதல்:
இவரும் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வரும் தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை சேர்ந்த சின்னசாமி என்ற வாலிபரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆசை வார்த்தையால் வினை:
புவனாவிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய சின்னசாமி அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்ததாகவும் பின்னர் திருமணம் செய்ய மறுத்ததாகவும் கூறப்ப டுகிறது.
ஏமாற்றியதாக புகார்:
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி புவனா சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் சின்னசாமி திருமணம் செய்வதாக கூறி தன்னிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றியதாக தெரிவித்து இருந்தார்.
ஜாமீன் மனு தள்ளுபடி:
இந்த விவகாரத்தில் முன்ஜாமீன் வழங்ககோரி சின்னசாமி சேலம் மாவட்ட அமர்வு கோர்ட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.
நம்பிக்கை மோசடி புகார்:
இந்த நிலையில் மாணவி அளித்த புகார் தொடர்பாக கல்லூரி விரிவுரையாளர் சின்னசாமி மீது நம்பிக்கை மோசடி, வன்கொடுமை உள்ளிட்ட சில பிரிவுகளின் கீழ் ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சின்னசாமியை தேடி வருகிறார்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications