For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை டாஸ்மாக் கடைக்கு தீ வைத்தோர் மீது கடும் நடவடிக்கை: ஜெ. உத்தரவு

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தியாகராயர் நகரில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை மாவட்டம், கிண்டி வட்டம், தியாகராய நகர், தெற்கு போக் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடையில் 12.8.2015 அன்று சில மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், பணியில் இருந்த ரங்கசாமி என்பவரின் மகன் பழனிவேல் என்பவர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்.

Legal action against those who attacked TASMAC outlet: Jayalalithaa

இந்த சம்பவத்தில் தீக்காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் பழனிவேலுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க சென்னை மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் டாஸ்மாக் ஊழியர் பழனிவேல் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

பழனிவேலுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50,000/- ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa expressed regret over the attack on the Tamil Nadu State Marketing Corporation (TASMAC) liquor outlet and said she had directed police to take legal action against the attackers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X