கேஸ் என்ன கேஸ்.. என்னை துப்பாக்கியால் சுட்டாலும் தாங்கிக் கொள்வேன்.. மு. க.ஸ்டாலின் ஆவேசம்
தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருக்கும் போலீஸ் என்னை சுட்டாலும் தாங்கிக்கொள்வேன் என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். தூத்துக்குடி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சட்டமன்ற அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளது.
மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

செய்தியாளர்களுக்கு ஸ்டாலின் பேட்டி
தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. இதன் பின் சட்டசபையில் இருந்து வெளியே வந்த ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

முதல்வர் ஏன் போகவில்லை
கடந்த மூன்று நாட்களாக தூத்துக்குடி நகரமே கொந்தளிப்பாக இருக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், எஸ்பி ஆகியோரை மாற்றியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது இதுவரை நடவடிக்கை இல்லை. இதுவரை முதல்வர் தூத்துக்குடி செல்லவில்லை. அங்கு யாருரையும் பார்த்து ஆறுதல் கூட சொல்லவில்லை.

செயலற்றுப் போன அரசு
இது அரசு செயலற்று இருக்கிறது என்பதை காட்டுகிறது. எத்தனையோ ஆட்சியை பார்த்துள்ளோம். ஆனால் அப்போதெல்லாம் அரசு பக்கம் மக்கள் இருந்தனர். இப்போது துப்பாக்கி சூடு நடத்த பயிற்சி பெற்ற அதிகாரிகளை பயன்படுத்தியுள்ளனர். இப்படி எல்லாம் இதற்கு முன்பு நடந்தது இல்லை. உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் இதை விசாரிக்க வேண்டும்.

முதல்வர் விலக வேண்டும்
தனது பதவியை காப்பாற்ற முதல்வர் முயற்சி செய்கிறார். அதனால்தான் அவர்கள் யோசித்துக் கொண்டுள்ளனர். அதிமுக போராடுவது எல்லாம் அதற்குத்தான். முதல்வர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். டிஜிபி ராஜேந்திரனை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இதை சொல்லிவிட்டுதான் நாங்கள் அலுவல் கூட்டத்தை புறக்கணித்துள்ளோம்.

சுட்டாலும் தாங்குவேன்
என் மீது வழக்கு போட்டுள்ளார்கள். என்ன செய்தாலும் தாங்கிக்கொள்வேன். அங்கே குண்டடி பட்டு மக்கள் இறந்துள்ளனர். வழக்கு என்ன அங்கே இருக்கும் போலீஸ் என்னை வந்து சுட்டுக் கொன்றாலும் தாங்கிக் கொள்வேன் என்று உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications