ஜல்லிக்கட்டுக்காக தொடரும் மாணவர்கள் போராட்டம் - மதுரையில் 3வது நாளாக பிரம்மாண்ட பேரணி
பொங்கல் பண்டிகை நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர். மதுரையில் 3வது நாளாக பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.
மதுரை: பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதி கோரி பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பற்ற வைத்த தீப்பொறி மதுரை, திருச்சி, புதுச்சேரி என பற்றி பரவி வருகிறது.
திங்கட்கிழமையன்று மதுரை கோரிப்பாளையத்தில் ஏராளமானோர் திரண்டு, பேரணி நடத்தி, ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் மதுரை கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு திருப்பரங்குன்றம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் ஜெய்ஹிந்த் புரம், ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், மீண்டும் பிரதான சாலைக்கு வந்து மத்திய அரசு, பீட்டா அமைப்பை கண்டித்து முழக்கமிட்டனர்.

சட்டக் கல்லூரி மாணவர்களும் கல்லூரியைப் புறக்கணித்து மாவட்ட நீதிமன்றம் வரை பேரணியாக சென்றனர். அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
அனைத்துக் கல்லூரி மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.
பிரம்மாண்ட பேரணி
மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை முதலே திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நீண்டது. இதனால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
ஜல்லிக்கட்டு வேண்டும்
ஜல்லிக்கட்டு எங்களின் உரிமை. மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பு இதில் தலையிடக்கூடாது என்றும் பேரணியாக சென்ற மாணவர்கள் தெரிவித்தனர். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க நினைப்பதா என்றும் கேள்வி எழுப்பினர்.
ஜல்லிக்கட்டு நடத்துவோம்
பொங்கல் பண்டிக்கை இன்னும் சில நாட்கள் வர இருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தொடங்கி, மதுரை, திருச்சி, புதுச்சேரி என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன. மத்திய அரசு செவி சாய்க்குமா?
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications