ஜிஎஸ்டி வருது... கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்புகள் வசூலிக்க சட்ட திருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்பு வசூலிக்க சட்டத்திருத்தம் கோரி சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டசபையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி சட்ட முன்வடிவைத் தாக்கல் செய்தார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைப்படி ஜூலை 1முதல் நாடு முழுவதும் அமலாக உள்ளது. திரைப்படத்துறைக்கு 28 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு குறைவான டிக்கெட்களுக்கு 18சதவிகித தமிழ் திரையுலகம் இந்த வரி விதிப்பால் பெரிதும் பாதிக்கப்படும் என நடிகர் கமல்ஹாசன் குரல் எழுப்பியிருந்தார்.

Local bodies all set to collect tax soon

வரியை குறைக்காவிட்டால் சினிமாவை விட்டு வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என கமல் தெரிவித்திருந்த கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

தமிழகத்தில் தமிழ் பெயரில் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதனிடையே ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டால் இந்த வரிவிலக்கு எதிர்பார்க்க முடியாது. தமிழக அரசின் வரி வருமானமும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு கேளிக்கை வரி மூலம் கிடைக்கும் வருமானம் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கேளிக்கை வரியை உள்ளாட்சி அமைப்பு வசூலிக்க சட்டத்திருத்தம் கோரி சட்ட முன்வடிவு தாக்கல் செய்துள்ளார்.

ஜி.எஸ்.டி அமலுக்கு வந்தால் கேளிக்கை வரி மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்காது என்றும் கேளிக்கை வரியை உள்ளாட்சித் துறையுடன் இணைக்கும் பட்சத்தில் வருவாய் பாதிக்கப்படாது என்றும் அமைச்சர் எஸ். பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஜிஎஸ்டி வரியோடு கேளிக்கை வரியும் இணைந்தால் பொழுது போக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As GST is going to be implemented the govt is all set move a bill regarding the collection of entertainment tax.
Please Wait while comments are loading...