சரணடைந்த லாரி ஷெட் உரிமையாளர் வேலுவுக்கு பிப். 23 வரை நீதிமன்ற காவல்

ஸ்ரீவைகுண்டம்: ரவுடி பினு அம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்த லாரி ஷெட் உரிமையாளர் வேல்முருகனை பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.
பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் கடந்த 2-ஆம் தேதி 100 ரவுடிகள் சேர்ந்து ரவுடி பினுவின் பிறந்தநாளை கொண்டாடினர். இந்த இடம் லாரி ஷெட் உரிமையாளர் வேணுவுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அப்போது நம்பர் 1 ரவுடி ராதாகிருஷ்ணனை தீர்த்து கட்ட திட்டம் தீட்டப்பட்டதும் தெரியவந்தது.

இவர்கள் குடித்து விட்டு கும்மாளம் போடும் தகவலறிந்த போலீஸார் 100 ரவுடிகளை சுற்றி வளைத்தனர். அப்போது 72 ரவுடிகளை கைது செய்தனர். மேலும் முக்கிய ரவுடிகளான பினு, கனகு, விக்கி ஆகியோர் ஓட்டம் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர்களை பிடிக்க 3 தனிப்படை போலீஸார் அமைக்கப்பட்டு சேலம், கரூர் ஆகிய பகுதிகளில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் அம்பத்தூர் காவல் நிலையத்தில் ரவுடி பினு அவராகவே வந்து சரணடைந்தார்.
மேலும் தான் பெரிய ரவுடி இல்லை என்று கண்ணீர் வாக்குமூலமும் அளித்து காமெடி பீஸாகினார். பினு சரணடைந்த நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த லாரி ஷெட் உரிமையாளர் வேல்முருகனும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து இவரை வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவரிடம் விசாரணை நடத்தினால் ஷெட் அருகே போலீஸாரால் கைப்பற்றப்பட்ட 500 கிலோ செம்மரக்கட்டைகள் குறித்த விவரங்கள் தெரியவரும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!