''காசு, பணம், துட்டு, மணி.. மணி'': 'முதல் போணி'.. ரூ.44.29 லட்சம் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை அருகே அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சரியான ஆவணங்கள் இல்லாத 11 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

லோக்சபா தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தொழில் தொடர்பாக 11,29,000 ரூபாயை எடுத்து கொண்டு தனது காரில் காரைக்குடியை நோக்கி சென்றுள்ளார்.

அப்போது, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள கும்மங்குடி கிராமம் அருகே திருப்பத்தூர் வட்டாட்சியர் விஜயகுமாரி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

ராதாகிருஷ்ணன் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரின் உள்ளே பையில் சுற்றி வைத்து இருந்த பணத்தை கைப்பற்றி விளக்கம் கேட்டுள்ளார் வட்டாட்சியர் விஜயகுமாரி. ஆனால், ராதாகிருஷ்ணன் அதற்கு முறையாக கணக்கு சொல்ல முடியவில்லை.

இதையடுத்து, பறிமுதல் செய்த பணத்தை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவி்ட்டார். மேலும், அந்த பணத்திற்கு முறையாக கணக்கு காண்பித்துவிட்டு திரும்ப பெற்றுகொள்ள ராதாகிருஷ்ணனுக்கு வட்டாட்சியர் அறிவுரை வழங்கி அனுப்பியுள்ளார்

நீலகிரியில் 33 லட்சம் பறிமுதல்

வியாழக்கிழமை இரவு நீலகிரி மாவட்டத்தில் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டிருந்தபோது, ரூ.28 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், இன்று அதிகாலை முதல் கோத்தகிரி மற்றும் குன்னூர் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் மேலும் ரூ. 5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+