ஜேசிபி இயந்திரத்தை ஓட்டிய மு.க.ஸ்டாலின்... ஆச்சர்யத்தில் பொதுமக்கள் - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரூர்: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கரூர் தோகைமலையில் குளங்களைத் தூர் வாரும் பணியை ஆரம்பித்து வைத்தார். அப்போது ஜேசிபி இயந்திரத்தை அவரே இயக்கியதைக் கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் கையசைத்து ஆர்ப்பரித்தனர்.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்த காரணத்தால் தமிழகம் எங்கும் கடும் வறட்சி நிலவி வருகிறது. அதனால் தண்ணீர் தட்டுப்பாடும் இருந்து வருகிறது. ஆளும் கட்சி, மழை வேண்டி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக யாகங்கள், பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

 M.K Stalin drove Jcp machine in Karur Thogaimalai

திமுக கரூர் தோகைமலையில் குளங்களை தூர் வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. கரூர் தோகைமலையில் திமுக சார்பில் நடந்து வரும் தூர்வாரும் பணியை பார்வையிட்ட திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தானே ஜேசிபி இயந்திரத்தில் ஏறி அதனை இயக்கினார்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அவருக்கு கையசைத்து ஆர்ப்பரித்து தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK acting leader M.K Stalin drove Jcp machine in Karur Thogaimalai when he visited lake cleaning activity.
Please Wait while comments are loading...