For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுவாணி விஷயத்தில் கேரளாவை கண்டிக்க கூட்டம் சேர்த்துவிட்டு திமுக என்ன செய்தது தெரியுமா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

கோவை: சிறுவாணி ஆற்றில் அணை கட்டும் கேரளாவை கண்டித்து கோவை கொடீசியா மைதானத்தில், திமுக சார்பில் இன்று மதியம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் திமுக பொருளாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

M.K.Stalin slams Jayalalitha

உரையின் தொடக்கத்தில் கேரளாவையும், மத்திய அரசையும் ஒரீரு வரிகளில் கண்டித்ததோடு நிறுத்திக் கொண்டார் ஸ்டாலின். தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுத்தது தவறு என்பதோடு பேச்சை நிறுத்திய ஸ்டாலின், தனது 20 நிமிட உரையில் ஜெயலலிதாவையும், தமிழக அரசையுமே கண்டித்துக் கொண்டிருந்தார்.

குறிப்பாக, சட்டசபையில் சமீப காலமாக அதிமுக-திமுக நடுவே நடைபெற்ற மோதல்களை வெளியே சொல்ல ஒரு வாய்ப்பாகவே இந்த கூட்டத்தை ஸ்டாலின் பயன்படுத்திக்கொண்டார்.

அதாவது, இதுவும் மற்றொரு 'சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு' பொதுக்கூட்டம் போலத்தான் இருந்தது. அவ்வப்போது நடு நடுவே, சிறுவாணி பெயரையும் சொல்லி, ஆதலால் திமுக இக்கூட்டத்தை நடத்துகிறது என சொல்ல மறக்கவில்லை ஸ்டாலின்.

அதிமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் பாடல் கச்சேரி நடத்திவருவதாகவும் ஸ்டாலின் கண்டித்து பேசினார். ஒருவழியாக பேச்சின் இறுதியில், சிறுவாணி அணை பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனமாகக இருந்தால் திமுக சும்மாவிடாது.. இது எச்சரிக்கை என முடித்தார் அவர்.

கண்டன பொதுக்கூட்டத்திற்கு பெயர் என்ன சொன்னீங்க, 'கேரளாவை கண்டித்து'.. ரைட்டு விடுங்க!

English summary
M.K.Stalin slams Jayalalitha as the DMK announce their rally against Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X