For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு எதிரான வழக்கு- வி.சி.க. மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது பாஜக. அவரும் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

சென்னை வண்டலூரில் வரும் 8-ந் தேதியன்று மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சென்னையில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்தது தவறு என்றும் அவர் பங்கேற்கும் மாநாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி கெளதம் சென்னா ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றதல்ல என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. இம் மனு விளம்பர நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்ட மனு என்றும் நீதிபதிகள் கண்டித்திருக்கின்றனர்.

English summary
The Madras high court on Tuesday dismissed a petition filed by Gowtham Senna of VCK against Narendra Modi as Prime Ministerial Candidate of BJP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X