பஸ் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காதது ஏன்?... அரசுக்கு ஹைகோர்ட் சுளீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  தமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் ? போராட்டம் எதனால் ?- வீடியோ

  சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்காதது ஏன் என்ற அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. போக்குவரத்து கழகங்களை கலைத்துவிட்டு தனியார்மயாமாக்கலாமே? என்று நீதிமன்றம் அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.

  தமிழகம் முழுவதும் நடைபெற்ற வரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன் அறிவிப்பு செய்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் ஊழியர்களின் ஓய்வூதியம் அளிக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவைத் தொகை இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளன.

  Madras HC orders government to provide the arrears immediately to transport employees.

  இதனையடுத்து அரசுக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது ஏன். உடனடியாக ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். இதற்கு நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக அரசு பதில் அளித்துள்ளது.

  ஓய்வூதியத்தை ஏன் இத்தனை ஆண்டுகளாக வழங்கவில்லை, போக்குவரத்து கழகத்தை லாபத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்கிவிடலாமா என்று நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Madras HC orders government to provide the arrears immediately to transport employees, as the employees union mentioned it is the main cause for indefinite strike.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற