இந்துத்துவத்தை திணிக்காதே.. திரும்பிப் போ.. சென்னை பல்கலையில் இல.கணேசனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பல்கலைக்கழக விழாவில் பங்கேற்க வந்த பாஜக எம்.பி இல.கணேசனுக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 'உயர்கல்வியும் அதன் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக எம்பி இல.கணேசன் அழைக்கப்பட்டார்.

Madras University student stage protest against Ila. Ganesan

அதன்படி கருத்தரங்கில் கலந்த கொண்டு இல. கணேசன் பேசத் தொடங்கினார். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் எழுந்து நின்று திரும்பிப் போ.. இந்துத்துவத்தை திணிக்காதே என இல.கணேசனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

மாட்டிறைச்சி தடை, நீட் தேர்வு, கல்வியில் இந்துத்துவம் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மாணவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், எதிர்ப்பு கோஷங்கள் எழுதிய பேனர்களை உயர்த்திப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திடீரென மாணவர்கள் போராட்டத்தை நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் அரங்கில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madras University student staged a protest against Ila. Ganesan, who participated in a function held at campus.
Please Wait while comments are loading...