பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம்: விசாரணை குழுவை திடீரென வாபஸ் பெற்ற காமராஜர் பல்கலைக்கழகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  6 மணிக்கு ஆளுநர் செய்தியாளர் சந்திப்பு!- வீடியோ

  சென்னை: பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் அமைக்கப்பட்ட ஐவர் குழுவை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் திடீரென வாபஸ் பெற்றுவிட்டது.

  விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரிகளின் காமஇச்சையை தீர்த்துக் கொள்ள அவரிடம் பயிலும் மாணவிகளை அணுகினார்.

  இதுதொடர்பான ஆடியோ காட்சி ஆதாரத்துடன் மாணவிகள் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் அவர் 15 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

  கல்லூரி நிர்வாகம்

  கல்லூரி நிர்வாகம்

  இந்நிலையில் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலாவை கைது செய்ய வேண்டும் என்று கல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் நிர்மலா மீது கல்லூரி நிர்வாகம் புகார் கொடுத்தது.

  5 பேர் கொண்ட குழு

  5 பேர் கொண்ட குழு

  நிர்மலா ஆடியோவில் குறிப்பிட்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரை உத்தரவின்பேரில் நிர்மலா குற்றம்சாட்டும் விவகாரம் குறித்து கணிதத் துறை தலைவர் லெல்லிஸ் திவாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

  நிர்மலா தேவி கைது

  நிர்மலா தேவி கைது

  இந்த புகாரின் பேரில் அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் சென்ற போது வீட்டுக்குள் உள்பக்கமாக பூட்டிக் கொண்டு நிர்மலா வெளியே வர மறுத்துவிட்டார். இதையடுத்து உறவினர்கள் முன்னிலையில் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அவரை போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

  குற்றவாளிகள் தப்ப முடியாது

  குற்றவாளிகள் தப்ப முடியாது

  இதையடுத்து நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

  ஐவர் குழு வாபஸ்

  ஐவர் குழு வாபஸ்

  இந்த நிலையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தர் செல்ல துரை சந்தித்தார். அப்போது விசாரணை அதிகாரியை ஆளுநரே நியமித்துள்ள நிலையில் பல்கலை சார்பில் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்துக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் ஆளுநரிடம் செல்லதுரை உறுதியளித்துள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Madurai Kamarajar University withdraws its 5 member investigating committee as the Governor appoints IAS officer to probe the Nirmala Devi case.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற