For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகா சிவராத்திரி 2018: மயிலாப்பூரில் 7 சிவலாயங்களை ஒரே நாளில் தரிசிக்கும் பக்தர்கள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களில் பக்தர்கள் இன்று தரிசனம் செய்கின்றனர்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

Recommended Video

    4 Kala Rituals On Shivaratri | சிவராத்திரியில் செய்ய வேண்டிய முக்கிய பூஜைகள்- Oneindia Tamil

    சென்னை: மகா சிவராத்திரி நாளில் குமரி மாவட்டத்தில் 12 சிவ ஆலயங்களை தரிசிப்பது போல மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களை பக்தர்கள் இன்று தரிசனம் செய்கின்றன.

    மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர், காரணீஸ்வரர், வாலீஸ்வரர், வெள்ளீஸ்வரர் மற்றும் தீர்த்தபாலீஸ்வரர் கோவில் என 7 சிவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    Maha Shivratri 2018: 7 shiva temples pooja at Mylapore

    நான்கு கால அபிஷேகத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து இறைவனை தரிசிப்பது பக்தர்கள் வழக்கம். சென்னையின் பல பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் இன்றைய தினம் மயிலாப்பூரில் சிவ தரிசனம் செய்கின்றனர்.

    Maha Shivratri 2018: 7 shiva temples pooja at Mylapore

    இதே போல திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்,திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவில், அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் கோவில், பாடி வலிதாயநாதர் கோவில், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், புழல் திருமூலநாதசாமி கோவில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், அகத்தீஸ்வரர் கோவில்களில் இன்று இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

    Maha Shivratri 2018: 7 shiva temples pooja at Mylapore

    மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சென்னை மல்லீஸ்வரர் கோவில், எம்.கே.பி.நகர் ஈஸ்வரன் கோவில், கந்தகோட்டம் முருகன் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், திரிசூலம் திருசூலநாதர் கோவில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுகிறது.

    அனைத்து சிவன் கோவில்களிலும் நான்கு கால அபிஷேகம் நடைபெறுகிறது. பக்தி சொற் பொழிவு, திருவிளக்கு பூஜை, மாணவ, மாணவிகளின் பரத நாட்டியம், பட்டிமன்றம், தேவாரம், திருமுறை பராயணம் நடைபெறுகிறது.
    பக்தர்களுக்கு சுடச்சுட பிரசாதமும் வழங்கப்படும்.

    English summary
    Maha Shivratri, the grand night of Shiva this year will fall on 13th of February 2018. Four Kaala Puja and Maha Abishekam in Chennai Shiva and Muruga temples celebrates Maha Shivratri.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X