For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகா சிவராத்திரி: சென்னை சிவ ஆலயங்களில் ஏற்பாடுகள் தீவிரம்

சிவராத்திரி விழா மயிலாப்பூரில் உள்ள 7 சிவ ஆலயங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மகா சிவராத்திரி விழா வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள சிவ ஆலயங்களிலும் மயிலாப்பூரில் உள்ள ஏழு சிவ ஆலயங்களில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியன்று மகா சிவ ராத்திரி விழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவ ஆலயங்களில் விடிய விடிய அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். வரும் வெள்ளிக்கிழமை பிப்ரவரி 24ஆம் தேதி மகா சிவாராத்திரி விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னையில் சிவ ஆலயங்களில் சிறப்பு எற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர்,வெள்ளீஸ்வரர்,காரணீஸ்வரர்,விருபாக்ஷீஸ்வரர்,மல்லீஸ்வரர்,வாலீஸ்வரர்,தீர்த்தபாலீஸ்வரர் ஆகிய பிரசித்தி பெற்ற ஏழு சிவ ஆலயங்கள் உள்ளன. சிவராத்திரி தினத்தன்று இந்த ஏழு ஆலயங்களிலும் 4 காலங்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன.

சில ஆலய ஓட்டம்

சில ஆலய ஓட்டம்

தொண்டர்கள் கபாலீஸ்வரர் கோவில் தொடங்கி மல்லீஸ்வரர்,விருபாட்சீஸ்வரர் கோவில், காரணீஸ்வரர், வாலீஸ்வரர் கோவில் வெள்ளீஸ்வரர் தீர்த்த பாலீஸ்வரர் கோவில் வரை 7 சிவ ஆலயங்களுக்கும் விடிய விடிய சென்று வழிபட்டு வருவார்கள்.

திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி

திருவெற்றியூர் தியாகராஜ சுவாமி

சென்னையில் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சாமி கோவில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில், பொழிச்சலூர் அகத்தீஸ்வரர் கோவில், அனகாபுத்தூர் அகத்தீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரி விழா கொண்டாப்படுகிறது.

பாடி திருவலிதாயம்

பாடி திருவலிதாயம்

பாடி வலிதாயநாதர் கோவில், பாடியநல்லூர் திருநிற்றீஸ்வரர் கோவில், புழல் திருமூலநாதசாமி கோவில், கொளத்தூர் சோமநாத சுவாமி கோவில், அகத்தீஸ்வரர் கோவில்களில் சிவராத்திரி தினத்தன்று நான்கு கால பூஜைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிவராத்திரி கோலாகலம்

சிவராத்திரி கோலாகலம்

மண்ணடி மல்லிகேஸ்வரர் கோவில், கச்சாலீஸ்வரர் கோவில், பாரிமுனை ஏகாம்பரேஸ்வரர் கோவில், சென்னை பாரிமுனை மல்லீஸ்வரர் கோவில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில், திரிசூலம் திருசூலநாதர் கோவில், அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோவில், அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோவில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவில், குன்றத்தூர் நாகேஸ்வர சுவாமி கோவில் ஆகிய
கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

English summary
Mahashivratri celebrations 24th Friday evening 6 PM to 25th morning 6 AM.Mahashivratri throughout the nation or it is believed that the Lord saved the universe by drinking halahal poison which was churned out of ocean by the devas and asuras.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X