சென்னை... கொட்டித் தீர்த்த மழையால் வெறிச்சோடிய திருமண மண்டபங்கள்
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் இருந்தே மழை இடை விடாமல் பெய்து வருவதால் முகூர்த்த நாளான இன்று நடைபெற்ற பல்வேறு திருமணங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. இதனால் மிஞ்சிய உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொண்டு சென்றனர்.
இன்று முகூர்த்தநாள் என்பதால் சென்னையில் உள்ள பல்வேறு திருமண மண்டபங்களில் திருமணங்கள் கோலாகலமாக நடைபெற்றன. திருமணத்துக்கு வருபவர்களுக்காக பல்வேறு உணவு வகைகள் தட புடலாக சமைக்கப்பட்டன. ஆனால் காலையில் இருந்தே மழை இடை விடாமல் பெய்து வருவதால் திருமண மண்டபங்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 500 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்ததால் அங்கு தயார் செய்யப்பட்டிருந்த உணவு வகைகள் மீதமாகின.
இதனால் அந்த உணவு வகைகளை ஒரு வேனில் ஏற்றி அருகில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டு சென்று கொடுத்தனர்.
இதுதொடர்பாக திருமண நிகழ்ச்சி ஏற்பட்டாளர் ஒருவர் கூறும்போது, ‘‘சென்னையில் பெய்து வரும் கன மழை காரணமாக பெரும்பாலான திருமண மண்டபங்களில் கூட்டமே இல்லை. இதனால் மீதமான உணவுகள் அனைத்தையும் திருமண வீட்டார் ஆதரவற்ற அனாதை இல்லங்களுக்கு கொடுத்துள்ளனர்'' என்றார்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications