For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பல கோடி ரூபாய் முறைகேடு... அம்பலப்படுத்திய பி.டபிள்யூ.டி அதிகாரிக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவு!

Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல கோடி ரூபாய் முறைகேட்டை அம்பலப்படுத்திய பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கன்னியாகுமரி மாவட்ட கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஆளுங்கட்சி பிரமுகர்களால் அதிகாரிகள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில், அருகாமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் வேளாண் உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி கடும் நெருக்கடி தாங்காமல் தற்கொலை செய்த நிலையில், குமரி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோர்ட் உத்தரவிட்டிருப்பதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Maudrai HC bench orders for protection to PWD whistle blower

குமரி மாவட்டம நாகர்கோவில் பழையாறு பகுதியில் பொதுப்பணித்துறை, வடிகால் உப கோட்ட உதவி செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் தன்ராஜ். அரசு பணிகளில் சில அதிகாரிகளின் பல கோடி ரூபாய் முறைகேடு சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில மனு தாக்கல் செய்தார். அந்த வழககு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் சில அதிகாரிகள் தரப்பிலும், ஓப்பந்தகாரர்கள் தரப்பில் இருந்தும் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது என்றும், தான் குடியிருந்து வருகிற பொதுப் பணித் துறை குடியிருப்புக்கு வந்து சிலர் மிரட்டி சென்றதாகவும் கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தனக்கும், தன் குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரி குமரி மாவடட் எஸ்பிக்கு கடிதம் மூலமாகவும், ஆசாரிப்பள்ளம் போலீசாருக்கு இமெயில் மூலமாகவும் புகார் அளித்துள்ளார்.

ஆனால் புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுககவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடர்நதார் தன்ராஜ். இதை விசாரித்த நீதிபதி சுந்தரேசன், ஏப்ரல் 19ம் தேதி அன்று ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி செயற் பொறியாளர் தன்ராஜ் நேரில் சென்று புகார் அளிக்க வேண்டும் என்றும் அந்த மனு மீது ஆசாரிபள்ளம் போலீசார் தக்க நடவடிககை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதன்படி தன்ராஜ் புகார் கொடுத்தார். இதை ஏற்ற போலீஸார் தற்போது அவருக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுத்துள்ளனராம்.

English summary
Maudrai HC bench has ordered the Kanniyakumari police to give protection to a PWD whistle blower.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X