பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் - ராணுவ விமானம் காரணம் என வட்டாட்சியர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என வட்டாட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.
மயிலாடுதுறை: பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். வெடிச்சத்தம் ஏற்பட ராணுவ விமானமே காரணம் என மாவட்ட ஆட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.
நில அதிர்வு வெடிச்சத்தம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெடிச்சத்தம்தான் கேட்டது என்றும் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

திடீர் வெடிச்சத்தமும் நில அதிர்வும் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வெடிச்சத்தம் குறித்து அந்த மாவட்ட மக்கள் கூறுகையில், விமானம் போன்ற ஒன்று தாழ்வாக பறந்து சென்றதற்கு பின் தான் இந்த நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.வெடிச்சத்திற்காக காரணம் குறித்து சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி பகுதி காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வட்டாட்சியர் பிரான்சுவா, ராணுவ விமானமே வெடிச்சத்தம் கேட்டதற்குக் காரணம் என்று தகவல் தெரிவித்துள்ளார். ராணுவ விமானத்தில் ஏர்லாக் விடுவிக்கப்படும் போது வெடிச்சத்தம் கேட்டதாகவும் இதானல் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் பிரான்சுவா கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை நேரத்தில் கேட்ட வெடிச்சத்தம் பலரையும் அதிர்ச்சிக்கும் அச்சத்திற்கும் ஆளாக்கி விட்டது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications