கதிராமங்கலம் மேடையில் வைகோ திடீர் மயக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்: கதிராமங்கலம் மேடையில் வைகோ திடீர் என மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்ததைத் தொடர்ந்து வைகோ மீண்டும் உரையாற்றினார்.

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் கிராம மக்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சந்தித்தார். அப்போது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் மக்களுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருந்தார்.

MDMK general secretary Vaiko fainted in dais at Kathiramangalam Village

அப்போது திடீரென அவர் மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் இருந்து அக்கட்சியின் நிர்வாகிகள் வைகோவை தூக்கி தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

இதைத்தொடர்ந்து மயக்கம் தெளிந்து வைகோ மீண்டும் மேடையில் உரையாற்றினார். வைகோ பேசிக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MDMK general secretary Vaiko fainted in dais at Kathiramangalam Village. This creates shock among the village people.
Please Wait while comments are loading...