For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதிமுக வேட்பாளர் பட்டியல் ரெடி -18ம் தேதி ரிலீஸ்?

|

சென்னை: பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக தனது வேட்பாளர் பட்டியலை மார்ச் 18ம் தேதி வெளியிடும் என்று செய்திகள் கூறுகின்றன.

பாஜக கூட்டணியில் முதல் நபராக இணைந்த கட்சி மதிமுகதான். வைகோதான் முதல் முதலில் பாஜக கூட்டணியில் இணைந்தார்.

MDMK may release its candidates list on March 18

ஆனால் அவரது கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்குள் தேமுதிகவும், பாமகவும் பெரும் குழப்படி செய்து விட்டன. இதன் காரணமாக சென்னைக்கு நரேந்திர மோடி வந்தபோது அவர் பங்கேற்ற கூட்டத்திற்குக் கூட போகவில்லை வைகோ. ஆனால் பின்னர் மனசு கேட்காமல் அவரை ஹோட்டலில் சந்தித்துப் பேசினார்.

இந்த நிலையில் தற்போது மதிமுகவுக்கு 7 தொகுதிகளை பாஜக ஒதுக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதாவது காஞ்சீபுரம், விருதுநகர், தூத்துக்குடி, ஈரோடு, தேனி, சிவகங்கை, நாகப்பட்டினம் ஆகியவையே மதிமுகவுக்குக் கிடைத்துள்ள தொகுதிகளாகும்.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தற்போது மதிமுக தயாரித்து விட்டதாக சொல்கிறார்கள். ஏற்கனவே மதிமுக தனது வேட்பாளர்களை எப்போதோ முடிவு செய்து விட்டது. ஆனால் தொகுதிப் பங்கீடு முடியாததால்தான் அது காத்திருந்தது.

தற்போது தொகுதிகள் கிடைத்து விட்டதால் வேட்பாளர் பட்டியலை வெ்ளியிட அது தயாரா்கி விட்டது. மார்ச் 18ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார் என்று தெரிகிறது. அன்றுதான் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வைகோ கூட்டியுள்ளார். அக்கூட்டத்திற்குப் பின்னர் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது.

English summary
Sources in Thayagam says that MDMK may release its candidates list on March 18. The party has been allotted 7 seats in BJP alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X