For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம்.. வைகோ வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பிரச்சாரம்செய்ததால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராடி வருகிறார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று உறுதியாக களம் கண்டு இருக்கிறார்கள். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

MDMK Vaikos car attacked by BJP goons in Tuticorin

இந்த நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதிமுகவின் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக உடன்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வைகோ பிரசாரம் செய்து வந்தார்.

அவருக்கு எதிராக கறுப்பு கொடி காட்டி தூத்துக்குடி பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மதிமுக தொண்டர்களின் வாகனம் மீது பாஜகவினர் கற்கள் வீசினர். அதோடு வைகோ வாகனம் மீதும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

பாஜகவினர் தாக்குதலில் மதிமுகவினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது. பின் அங்கு வந்த போலீஸ் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.

English summary
MDMK Vaiko's car attacked by BJP goons in Tuticorin, while he was doing protest against Sterlite. Police files case against the goons, after Vaiko complaint about the issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X