For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய அரசின் உதவியை தமிழக அரசு ஏற்க மறுப்பதா? ப.சி கண்டனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்ட்ரல் ரயில் குண்டுவெடிப்பில் தமிழக அரசின் முடிவு, தீவிரவாத தடுப்பை தடம்புரள செய்துவிடும் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை மாநில அரசுகள் தடுப்பதும், உளவுத்துறை ஒருங்கிணைப்பில் இடைவெளியை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Mechanism would have helped plug loopholes in coordination says PC

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழக போலீசாருக்கு உதவிகள் செய்ய மத்திய விசாரணை குழுவை சென்னைக்கு அனுப்பி வைக்க மத்திய அரசு முன் வந்தது. ஆனால், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது:

''சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புகள் பற்றி தேசிய விசாரணைக் குழு நேரில் விசாரிக்க வேண்டும். அதற்கு அனுமதி மறுப்பது நல்லதல்ல. அது மத்திய-மாநில அரசுகள் உறவை சீர்குலைக்க வழிவகுத்து விடும் என்று கூறியுள்ளார்.

தீவிரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் மாநில அரசுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படாத தாகும். அது விசாரணை, சோதனை போன்றவைகளில் இடைவெளியை ஏற்படுத்தி விடும்.

மேலும், மாநில அரசுகள் தேசிய விசாரணை குழுவை பயன்படுத்தாவிட்டால் அது தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை தடம் புரள செய்து விடும். அதுபோல, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைவதை மாநில அரசுகள் தடுப்பதும், உளவுத்துறை ஒருங்கிணைப்பில் இடைவெளியை ஏற்படுத்தி விடும்" என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

English summary
Concerned over the twin bomb explosions in a train in Chennai, finance minister P Chidambaram on Thursday made a strong pitch for NCTC, saying the mechanism would have helped plug loopholes in coordination.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X