குஜராத்தில் தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலை முயற்சி... நிர்வாகம் சொன்ன அற்ப காரணம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தென்காசி: அஹமதாபாத் மருத்துவக் கல்லூரியில் படித்து வரும் தமிழக மாணவர் மாரிராஜ் தற்கொலைக்கு முயன்றதற்கு நிர்வாகம் கூறியுள்ள காரணத்திற்கு குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகிலுள்ள கடையநல்லூர் தாலுகா போகநல்லூர் கிராமத்தையொட்டிய குக்கிராமம் ராமேஸ்வரரத்தை சேர்ந்தவர் மாணவர் மாரிராஜ். மாரிராஜின் குடும்பம் விவசாயக் குடும்பம் தந்தை உயிரிழந்த நிலையில் தாய் மாடத்தியம்மாள் தன்னுடைய 3 மகன்கள் மற்றும் மகளை வளர்த்து வந்துள்ளார்.

மாரிராஜின் குடும்பம் விவசாயக் குடும்பம் தந்தை உயிரிழந்த நிலையில் தாய் இந்திரா தன்னுடைய 3 மகன்கள் மற்றும் மகளை வளர்த்து வந்துள்ளார். மாரிராஜின் சகோதரர் முத்துக்குமார் ஜப்பான் நாட்டில் டோக்கியோவில் அறிவியல் ஆய்வாளராக இருக்கிறார். மாரிராஜ் மருத்துவராகும் கனவோடு எம்.பி.பி.எஸ்.முடித்து விட்டு அஹமதாபாத்தில் உள்ள பி.ஜே மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு அறுவை சிகிச்சை படித்து வருகிறார்.

மனமுடைந்து தற்கொலை முயற்சி

மனமுடைந்து தற்கொலை முயற்சி

அனைத்திந்திய அளவில் தமிழ்நாட்டிலிருந்து பிற்படுத்தப்பட்டோருக்கான அரசின் இட ஒதுக்கீட்டில் சீட்டு வாங்கி, அங்கு தங்கி படித்து வருகிறார் மாரிராஜ்.இந்நிலையில், தன்னை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்றும், சாதி பெயரில் தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி தூக்க மாத்திரை போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

ஏன் அனுமதிக்கவில்லை?

ஏன் அனுமதிக்கவில்லை?

இந்தச் சம்பவம் பற்றி தெரிவித்த, கல்லூரி நிர்வாகம், மாரிராஜன் கூச்ச சுபாவம் உடையவர் என்றும், பெரும்பாலான நேரங்களில் கல்லூரியில் இருப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்தக் காரணத்தால் தான் அவரை அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

சாதிய பாகுபாடு என குற்றச்சாட்டு

சாதிய பாகுபாடு என குற்றச்சாட்டு

ஆனால் மருத்துவக்கல்லூரி கூறும் காரணத்திற்கு மாரிராஜின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாரிராஜின் தங்கை கவிதா இதுபற்றி கூறும்போது தனது அண்ணனை தலித் என்ற காரணத்திற்க்காக பழிவாங்குவதாகவும்,டீ வாங்கிவரவும்,கல்லுரி காவலாளியாகவும்,எடுபிடி வேலைகள் செய்யவும் வர்புறுத்தியுள்ளனர்.இதனால் தான் தனது அண்ணன் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் கூறினார்.

நடவடிக்கை கோரும் தாய்

நடவடிக்கை கோரும் தாய்

தனது அண்ணனுக்கு நீதி கிடைப்பாதற்க்காக போராடவும்,ஏன் தற்கொலை செய்யவும் தயங்க மாட்டேன் என்றும் கவிதா தெரிவித்துள்ளார். மாரிராஜின் தாய் இந்திரா கூறும் போது தனது கணவர் இறந்து 18ஆண்டுகாலம் ஆகிறது, மாடு மேய்த்துதான் தனது குழந்தைகளை படிக்கவைத்ததாகவும் தனது மகனை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Medical student Mariraj from Thirunelveli district who is studying at Ahmedabad Medical college attempted suicide because of caste discrimination, his family seeks acction against the college management.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற