சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில்சேவையில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இலவச பயணம்
சென்னையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட மெட்ரோ ரயில் சேவையில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் இலவச பயணம் செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா மற்றும் சின்னமலை - டிஎம்எஸ் ஆகிய இரண்டு புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி இலவச பயணம் அறிவித்ததில், நேற்று ஒரே நாளில் 1.20 லட்சம் மக்கள் அதில் பயணித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மெட்ரோ ரயில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை புதிதாக இரண்டு வழித்தடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் நேரு பூங்கா வரையிலும், சின்னமலை முதல் டிஎம்எஸ் வரையிலும் புதிய மெட்ரோ வழித்தடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 25ம் தேதி துவக்கி வைத்தார்.
திறப்பு விழாவையொட்டியும், ரயில் சேவை குறித்த விழிப்பு உணர்வுக்காகவும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நேற்று மட்டும் இந்த வழித்தடங்களில் 1,20,500 பேர் பயணித்துள்ளனர். மேலும், இன்று மெட்ரோ ரயில் இலவச சேவையின் கடைசி நாள் என்பதால், இன்றும் பயணம் செய்ய கூட்டம் அலைமோதுகிறது.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்!












Click it and Unblock the Notifications