ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்- வேளாங்கண்ணி உள்ளிட்ட தேவாலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை!
வேளாங்கண்ணி: ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது. இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது இறைநம்பிக்கை. இதனடிப்படையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர். நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றன. சென்னை சாந்தோம் தேவாலயம், சென்னை பெசன்ட் நகர் தேவாலயம், வேளாங்கண்ணி தேவாலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு பிரார்த்தனைகளில் பங்கேற்றனர். இரவு 11 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்தப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. சில தேவாலயங்களில் அதிகாலை 4 மணி வரை சிறப்பு பிரார்த்தனை நிகழ்வுகள் நடந்தன.
திருப்பலியில் பூசிக்கப்பட்ட தீர்த்தம் தெளிக்கப்பட்டு அருளாசி வழங்கப்பட்டது. தேவாலயங்களில் இயேசு பிரான் உயிர்த்தெழும் நிகழ்வு விளக்குகளாலும் நாடகங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தப்பட்டன. அப்போது தேவாலயங்களில் இனிப்புகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்கள் வண்ண விளக்குகளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
#WATCH | Tamil Nadu: Midnight #Easter prayers were held at Velankanni Church in Nagapattinam. #Easter2024 pic.twitter.com/JYAG232rOm
— ANI (@ANI) March 30, 2024
முன்னதாக தலைவர்கள் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்திருந்த ஈஸ்டர் வாழ்த்துச் செய்தி: மூப்பர்களாலும், வேத பாலகர்களாலும் பழி தூற்றப்பட்ட இயேசு, தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து சபையில் நிறுத்தப்பட்டார். சதிகாரர்களின் காட்டுக் கூச்சலால் வேறு வழி இன்றி, இயேசுவை சிலுவையில் அறையுமாறு ஒப்புக் கொடுத்தான்.
இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, முகத்தில் காரித்துப்பி, கன்னத்தில் அறைந்து, வாரினால் அடித்துச் சித்திரவதை செய்தனர். கபாலஸ்தலம் எனும் கொல்கொதாவில், சிலுவையில் அறையப்பட்ட இரண்டு கள்வர்களுக்கு நடுவே, அவரும் சிலுவையில் அறையப்பட்டார்.
'தேவாலயத்தை இடித்து மூன்று நாளுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே இரட்சித்துக் கொள்' என்று நிந்தித்தனர்.
இருளைக் கிழித்து ஒளி எழுதல் போல, ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, சிலுவையில் அறையப்பட்டு, இரத்தம் சிந்திய கிறிஸ்து இயேசுநாதர், மனிதகுலத்தின் அவலத்தைப் போக்க மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த உன்னதத்தை, ஈஸ்டர் பண்டிகையாக உலகெங்கும் உள்ள கிறிஸ்தவப் பெருமக்கள் கொண்டாடுகின்றனர். இயேசு உயிர்த்தெழுந்தார், துக்கத்தில் இருந்து உலகம் மீண்டது. கொடுந்துயரில் தவிப்பவர்களுக்கும், மரண இருளில் கலங்குகின்றவர்களுக்கும், அநீதியின் பாரத்தால் நசுக்குண்டவர்களுக்கும், விடியலும் நீதியும் ஒருநாள் உதிக்கவே செய்யும் என்ற நம்பிக்கையை அவர்களது மனங்களில் ஈஸ்டர் வழங்குகிறது.
கூட்டாட்சித் தத்துவம் வெற்றிபெறவும், மாநில சுயாட்சி மலரவும், சனாதன இந்துத்துவா சக்திகளின் முயற்சிகளை முறியடிக்கவும் இந்நாளில் சபதம் ஏற்போம். மரண பயங்கரத்துக்கு ஆளாகி, துயர இருளிலும், கண்ணீரிலும், துடிதுடித்து வாடும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நீதி கிடைக்கும்; விடியல் உதிக்கும். அதற்காக இந்த ஈஸ்டர் திருநாளில், தமிழ்க்குலம் உறுதி எடுக்கட்டும். கருணையைப் போற்றும் கிறிஸ்தவப் பெருமக்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்திருந்தார்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications