அண்ணன் ஓபிஎஸ் அவர்கள்... தினகரனுக்கு கதவை படார்னு மூடிவிட்டு திடீர் பாசமழை பொழிந்த ஜெயக்குமார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை திடீரென 'அண்ணன் ஓபிஎஸ்' என குறிப்பிட்டு திடீரென பாசமழை பொழிந்துள்ளார்.

ஜெ. மறைவுக்குப் பிறகு அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்டதையடுத்து அக்கட்சி 3 அணிகளாக உடைந்துள்ளது. வரும் 5ஆம் தேதி அதிமுக தலைமை கழகம் மற்றும் கட்சியை
கைப்பற்றும் திட்டத்தில் உள்ளார் டிடிவி தினகரன்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.

 'அண்ணன் ஓபிஎஸ்'

'அண்ணன் ஓபிஎஸ்'

அப்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை 'அண்ணன் ஓபிஎஸ்' எனக் கூறி திக்குமுக்காடச் செய்தார். ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்து செயல்படத் தொடங்கியதில் இருந்தே அவரை கடுமையாக சாடி வந்தார் ஜெயக்குமார்.

திடீர் பாசமழை

திடீர் பாசமழை

சட்டசபை, செய்தியாளர் சந்திப்பு என கிடைக்கும் இடத்தில் எல்லாம் ஓபிஎஸை, சிறந்த நடிகர், நன்றி மறந்தவர் எனக்கூறி ஜெயக்குமார் விமர்சித்து வந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் அண்ணன் எனக்கூறி திடீரென அமைச்சர் ஜெயக்குமார் பாசமழை பொழிந்துள்ளார்.

பேச்சுவார்த்தை குழு

பேச்சுவார்த்தை குழு

ஓபிஎஸ் அணிதான் பேச்சுவார்த்தை குழுவை கலைத்ததாக கூறிய அவர் தங்கள் அணி பேச்சு வார்த்தை குழுவை கலைக்கவில்லை என்றார். அனைவரையும் அரவணைத்து செல்லத்தான் தாங்கள் விரும்புவதாகவும் அவர் கூறினார்.

கதவு திறந்தே இருக்கிறது

கதவு திறந்தே இருக்கிறது

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற ஜெயக்குமார் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது என்றும் கூறினார். மேலும் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் என அனைவரும் இரு அணிகளும் இணைவதைதான் விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Jayakumar said 'OPS brother' after a long time Jayakumar talking about OPS in a kindway. He said that their team is ready for talks.
Please Wait while comments are loading...