என்ன கேட்குறாங்களோ கொடுங்கண்ணு தலைவர் சொல்லிட்டாரு! இடியாப்பம் ஈஸியா புளிய மெஷின்கள்! -ராஜகண்ணப்பன்
சென்னை: பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் என்ன கேட்கிறார்களோ அதை கொடுக்குமாறு தலைவர் தன்னிடம் சொல்லியிருக்கிறார் என அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் பேசும் போது அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைவர் என்று குறிப்பிட்டது முதலமைச்சர் ஸ்டாலினை தான்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தினம் தோறும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அதில் பங்கேற்று பேசிய அத்துறையின் அமைச்சர் ராஜகண்ணப்பன், 20 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கவனம் ஈர்க்கும் படியாக இருந்தது, பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் என்ன கேட்கிறார்களோ அதை கொடுக்குமாறு ஸ்டாலின் தன்னிடம் சொல்லியிருக்கிறார் என அவர் கூறியது தான்.
அதேபோல் இந்த விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு இடியாப்பம் செய்து கொடுப்பதற்கு வசதியாக தலா ரூ.65,000 மதிப்பில் ரூ.1 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் இடியாப்பம் அச்சு இயந்திரம் வழங்கப்படும் என அறிவித்தார் ராஜகண்ணப்பன்.
இதை படிப்பவர்களுக்கு இதில் என்ன ஆச்சரியம் உள்ளது என எண்ணத் தோன்றலாம். ஆனால், அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களும் வாய்க்கு ருசியாக இடியாப்பம் சாப்பிட வேண்டும் என்ற சிந்தனையின் வெளிப்பாடாக தான் இடியாப்பம் அச்சு இயந்திரம் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் இனி வாரத்திற்கு ஒரு நாளோ, இரண்டு நாட்களோ மேற்கண்ட விடுதிகளில் இடியாப்பம், குருமா காலை வேளைகளில் வழங்கப்படவுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைகளின் கீழ் இயங்கும் 1,354 விடுதிகளில் 18 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022 ஜூன் மாதம் தான் உணவுப்பட்டியல் மாற்றப்பட்டன.
அதன் படி சேமியா கிச்சடி, பூரி மசால், இட்லி சாம்பார், பொங்கல், ஊத்தாப்பம், ரவா கிச்சடி, தோசை, இடியாப்பம் உள்ளிட்ட டிபன்கள் தினமும் நாள் கிழமை சுழற்சி முறையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதில் இடியாப்பம் செய்வது தான் சற்று பெரிய பணியாக இருந்து வந்த நிலையில், இடியாப்பம் அச்சு இயந்திரங்களை வாங்கிக் கொடுத்து சமையலர்களின் பணியை எளிமையாக்க உள்ளது தமிழக அரசு.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications