பலம் உள்ள பக்கமெல்லாம் மாறி, மாறி விசுவாசம் காட்டும் அமைச்சர் உதயகுமார்! அம்பலப்படுத்தும் பேட்டிகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா தரப்புக்கு ஜால்ரா அடித்த அமைச்சர் ஆர்.வி.உதயகுமார், இப்போது அப்படியே மாற்றிப் பேசும் காட்சிகளை செய்தி டிவி சேனல்கள் திரும்ப திரும்ப போட்டுக்காட்டி நகைப்புக்குரியதாக மாற்றி வருகின்றன.

அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் இப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஆளாக பக்காவாக மாறிவிட்டார். இதனால் டிடிவி தினகரன் கட்சிக்குள் தலையெடுப்பது அவருக்கு பிடிக்கவில்லை.

தினகரன் அதிமுக கட்சி நிர்வாகிகளை நேற்று நியமித்த உத்தரவை உதயகுமார் கேலி செய்துள்ளார். முன்பெல்லாம் மறைமுகமாக தினகரன், சசிகலா தரப்பை விமர்சனம் செய்த அமைச்சர்கள் இப்போது நேரடியாகவே விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

தினகரனுக்கு கேள்வி

தினகரனுக்கு கேள்வி

ஆர்.வி.உதயகுமார் இப்போது அளித்த பேட்டியில் கூறியது: மக்களே நகைப்புரிக்குரிய வகையில் உள்ளது டிடிவி தினகரன் நடவடிக்கை. ஏன் இந்த அவசரம் காட்டப்பட்டது? யாரை முன்னிலைப்படுத்த அல்லது யாரை முடக்க இந்த நடவடிக்கை? இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளை தினகரன் நிர்வகித்தது குறித்துதான் இப்படி காட்டமாக பேசியுள்ளார் உதயகுமார்.

தினகரன் பதவியிலேயே இல்லையே

தினகரன் பதவியிலேயே இல்லையே

ஆர்.வி.உதயகுமார் இப்போது அளித்த பேட்டியில் கூறியது: மக்களே நகைப்புரிக்குரிய வகையில் உள்ளது டிடிவி தினகரன் நடவடிக்கை. ஏன் இந்த அவசரம் காட்டப்பட்டது? யாரை முன்னிலைப்படுத்த அல்லது யாரை முடக்க இந்த நடவடிக்கை? இவ்வாறு உதயகுமார் தெரிவித்தார். கட்சி நிர்வாகிகளை தினகரன் நிர்வகித்தது குறித்துதான் இப்படி காட்டமாக பேசியுள்ளார் உதயகுமார்.

தியாகத்தின் திருவுருவம், கருணையின் வடிவம்

தியாகத்தின் திருவுருவம், கருணையின் வடிவம்

ஆனால், இதே உதயகுமார், ஜெயலலிதா மறைந்த பிறகு, அளித்த பேட்டியில் கூறியதை பாருங்களேன். அம்மா விட்டுச்சென்றுள்ள புனித பணியை, கழக பணியை, மக்கள் பணியை, பெருமதிப்புக்குரிய கருணையின் வடிவம், தியாகத்தின் திரு உருவம் சின்னம்மா அவர்கள் பொறுப்பேற்று, அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களை காப்பாற்றி, அதிமுக இயக்கத்தை காப்பாற்றி, அம்மா பெயரில் நடக்கும் புனித அரசுக்கு தலைமை பொறுப்பேற்று, அதிமுக மூலமாக கழக பணியும், அரசின் மூலம் மக்கள் சேவையும் ஆற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கேப்விடாமல் தம்கட்டி பேசியுள்ளார் உதயகுமார். இவ்விரு காட்சிகளும் இப்போது டிவி சேனல்களின் வைரல் செய்தியாகியுள்ளது.

பலே உதயகுமார்

பலே உதயகுமார்

ஜெயலலிதா ஆட்சியின்போது, காலணி அணியாமல் சட்டசபை சென்று வந்தார் உதயகுமார். தெய்வம் இருக்கும் இடத்தில் செருப்பு அணிவதா என்று அக்கட்சியினர் யோசிக்காத புது ஐடியாவில் யோசித்து கருத்து தெரிவித்து இவ்வாறு ஜெயலலிதாவை குளிர்வித்தார் உதயகுமார். ஜெ. மறைந்த பிறகு மொட்டையடித்தார். இதன்பிறகு சின்னம்மா எனக் கூறிக்கொண்டு சசிகலாவுக்கு விசுவாசம் காட்டினார். இப்போது, வலுவான அணியாக எடப்பாடி பழனிச்சாமி அணி விளங்குவதால், அங்கு விசுவாசம் காட்ட முயல்வதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister RV Udayakumar is speaking pro and against Sasikala camp which is now going viral in Tamil TV channels.
Please Wait while comments are loading...