கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா?- அமைச்சர் பதில் இதுதாங்க...

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படுமா?

  சென்னை: கோடையில் பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்படாது என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.

  கடந்த கோடை மிகவும் உக்கிரமாக இருந்ததால் வழக்கம் போல் ஏப்ரல் முழுவதும் இயங்கும் பள்ளிகளுக்கு 20 தேதியுடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது. அதுபோல் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் என்பதால் கோடையில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

  Minister Sengottaiyan says about School summer vacation

  இதனால் கோடை விடுமுறை 44 நாட்கள் ஆனது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே வெயில் சென்ட்சுரி அடிப்பதால் பள்ளி விடுமுறை மேலும் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவியது.

  இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசு பள்ளிகளில் மே 2 முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

  அன்றைய தினமே மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்கள் வழங்கப்படும். கோடை விடுமுறை எக்காரணத்தை கொண்டும் நீட்டிக்கப்படாது என்றார் அவர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Sengottaiyan says that there will be no extension in Summer vacation. As per Schedule, June 1st schools will be reopened.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற