கமல் கருத்துக்கெல்லாம் பதில் கூற விரும்பவில்லை.. அமைச்சர் செங்கோட்டையன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: கமல் போன்றோரில் கருத்துக்கு பதில் கூறுவது என்னைப் போன்றோருக்கு சரியானது அல்ல என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த பதில் தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அதைத்தொடர்ந்து நேற்று கமல் வெளியிட்ட அறிக்கையில் ஊழல்களை ஆதரங்களோடு பட்டியலிடுமாறு வேண்டுகோள் விடுத்தது மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.

Minister Sengottaiyan slams Kamal Hassan for his twitter request to the fans

கமலின் கருத்துக்கு அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் போன்றார் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, தமிழிசை ஆகியோர் கமலின் அரசியல் டுவிட்டுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

Minister Anbazhagan insulting Actor Kamalhassan-Oneindia Tamil

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கமல்ஹாசனின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை எனவும், கமல் போன்றோரின் கருத்துக்கு பதில் கூறுவது என்னைப் போன்றோருக்கு சரியானது அல்ல என்றும் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Education minister K Sengottaiyan slams Kamal Hassan for his twitter request to the fans.
Please Wait while comments are loading...