பாலியல் புகாருக்கு உள்ளானால் கடும் நடவடிக்கை.. ஆசியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் வார்னிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஈரோடு: பாலியல் புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தின் பல இடங்களில் ஆசிரியர்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளாவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் மாணவிகளும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

Minister Sengottaiyan warns teachers for the sexual harassment

ஒரு சில ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளால் மொத்த ஆசிரியர்கள் மீதும் மக்களிடையே தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையம் அருகே கொங்கர் பாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் ஆசிரியர்கள மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு தண்ணீர் கொடுப்பது குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Sengottaiyan warns teachers for the sexual harassment. He said severe action will be taken on teachers who are all gets sexual harasment complaint.
Please Wait while comments are loading...