அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் மோதி உயிரிழந்தது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை ஜல்லிக்கட்டில் உயிரிழந்தது!- வீடியோ

  புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை வாடி வாசல் மரத்தில் மோதி உயிரிழந்தது.

  கொம்பன் என்ற ஜல்லிக்கட்டு காளையை கடந்த ஓராண்டுக்கு முன்னர் அதிமுக பிரமுகரிடம் இருந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாங்கியதாக தெரிகிறது. இதுவரை 2 முறை தங்க நாணயம் பரிசு பெற்றுள்ள இந்த காளையை இதுவரை ஜல்லிக்கட்டில் யாரும் அடக்கியதில்லை.

  Minister Vijayabaskar's bull kills in the Jallikattu

  அத்தகைய பெருமை கொண்ட இந்த காளை தென்னலூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டது. அப்போது வாடிவாசலில் கொம்னை அவிழ்த்து விட்டபோது ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடி வந்த கொம்பன் வாடி மரத்தில் பலமாக மோதியது.

  இதில் அங்கேயே காளை மயங்கி விழுந்தது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் காளை இறந்துவிட்டதாக கால்நடைத் துறை மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து விஜயபாஸ்கரின் தோட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்ட காளையின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Minister Vijayabaskar's bull kills in the Jallikattu as it hits in the vaadi tree. It gets faint and takes to hospital, but it dies.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற