பொங்கலுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரியுள்ளோம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கலுக்கு கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கை விடுத்துளளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Minister Vijayabaskar urges Railways to operate additional trains

தமிழக அரசு தங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரினர். இன்று தலைமை செயலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு கவுரவம் பார்க்காமல்தான் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தியது.

இனி பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அரசு ஊழியர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய குழு பரிந்துரையின் போதுதான் சம்பளம் உயரும். ஆனால் இவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

பொங்கலுக்குள் ஓய்வூதியர்களுக்கு ரூ.504 கோடி நிலுவைத் தொகை வழங்கப்படும். இதனை ஏற்று ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டும். பொதுமக்களின் நலன் கருதி வெளியாட்களை வைத்து பேருந்தை இயக்கி வருகிறோம்.

3 ஆண்டுகளில் 2,57 மடங்கு இவர்களுக்கு ஊதியம் உயர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் ரயில்களை இயக்குமாறு ரயில்வேயிடம் கேட்டுள்ளோம். என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Transport Minister M.R.Vijayabaskar says that the government urges Railway Department to operate additional trains for Pongal festival.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற