சி.ஏ.ஏ. எதிர்ப்பு... கையெழுத்து இயக்கங்கள் சரித்திரத்தையே மாற்றி இருக்கின்றன: ஸ்டாலின்
சென்னை: பா.ஜ.க.- அதிமுகவின் துரோகத்தை தமிழக மக்களுக்கு உணர வைக்கும் வகையில் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழி கோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தக் கோரியும் 24.1.2020 அன்று எனது தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் பிப்ரவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு- அதன் அடிப்படையில், நான் முதன் முதலில் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இந்த கையெழுத்து இயக்கத்தைத் துவக்கி வைத்தேன். என்னுடைய சட்டமன்றத் தொகுதியில் நானே சென்று மக்களைச் சந்தித்து- அவர்களிடம் இந்தக் கையெழுத்து இயக்கம் பற்றி எடுத்துச் சொல்லி- கையெழுத்துப் பெற்றேன். அதைப் போலவே அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஆங்காங்கே தொடங்கி வைத்து- தமிழகம் முழுவதும் இந்தக் கையெழுத்து இயக்கம் தீவிரமாக நடைபெறுகிறது.

இன்று வழக்கம் போல் காலையில் முரசொலி அலுவலகம் செல்லும் வழியில், தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலைப் பகுதியில், நம் கழகத் தொண்டர்கள் கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருந்ததைப் பார்த்த நான்- காரிலிருந்து இறங்கிச் சென்று, தொண்டர்களோடு நானும் ஒரு தொண்டன் என்ற முறையில் இணைந்து கலந்து கொண்டு கையெழுத்துக்களைப் பெற்றேன். அப்போது ஏன் இந்தக் கையெழுத்து என்பதை மக்களிடம் விளக்கி- கையெழுத்துப் போட இயலாதவர்களிடம் கைரேகை இடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து- இந்தக் கையெழுத்து இயக்கம், மகத்தான மக்கள் இயக்கமாக நடைபெற வேண்டும் என்ற ஆர்வத்தை கழகத் தொண்டர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டு, அங்கிருந்து நான் முரசொலி அலுவலகத்திற்குப் புறப்பட்டுச் சென்றேன்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களை, கிராமம் கிராமமாக திண்ணைப் பிரச்சாரம் போலவும், நகர்ப்புறம் என்றால் வீதி வீதியாகவும் சந்தித்து, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த அதிமுகவின் துரோகத்தையும், இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்து சமூக நல்லிணக்கத்துடன் வாழும் அனைத்து சமுதாய மக்களையும் பிளவுபடுத்தும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தையும் விளக்கிட வேண்டும். கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரங்களை வழங்கிட வேண்டும். ஏதோ கையெழுத்துப் பெறுகிறோம் என்று இந்த இயக்கத்தை இயந்திர கதியில் நடத்தாமல்- ஒவ்வொரு கையெழுத்தைப் போடுவோரும் பா.ஜ.க-அதிமுகவின் துரோகத்தைப் புரிந்து கொள்ளும் நிலையை உருவாக்கி- இந்தப் பிரச்சாரம் பட்டிதொட்டிகளுக்கும் செல்லும் வகையில், இந்த கையெழுத்து இயக்கம், உணர்வு பூர்வமாகவும் அறிவு பூர்வமாகவும், மக்களின் பேரியக்கமாகப் பெருக்கெடுத்து நடைபெற்றிட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
கையெழுத்து இயக்கங்கள் சரித்திரத்தை மாற்றியதற்கு, பல உதாரணங்கள் உண்டு. ஆகவே பா.ஜ.க.- அதிமுகவின் துரோகத்தை தமிழக மக்களுக்கு உணர வைத்து - இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவும், என்.ஆர்.சி.க்கு வழிகோலும் என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தி வைக்கவும் கழகத் தொண்டர்கள் பெறும் ஒவ்வொரு கையெழுத்தும் உறுதிமிக்க ஒரு தூணாக நிற்கும். அந்த வகையில் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி- பிப்ரவரி 9 அல்லது 10 ஆம் தேதிக்குள் அனைத்து கையெழுத்துப் படிவங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும். அந்த ஒரு கோடி கையெழுத்துக்களையும் எடுத்துக் கொண்டு- டெல்லி சென்று- கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மேதகு குடியரசுத் தலைவர் அவர்களைச் சந்தித்து, இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துவார்கள்.
ஆகவே பா.ஜ.க.- அதிமுக கூட்டணி கைகோர்த்து தமிழக மக்களுக்கு செய்துள்ள மன்னிக்க முடியாத இந்தப் பச்சைத் துரோகத்தை, மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று விளக்கிடும்- இந்த மாபெரும் கையெழுத்து இயக்கம்- மக்கள் கடலை தன்பால் ஈர்த்த தனிப்பெரும் இயக்கம் என்ற பெயரினைப் பெற்றிடும் வகையில், கழகத் தொண்டர்கள் தொடர்ந்து உழைத்திட வேண்டும். கடந்த இரு நாட்களாக இருந்த சுறுசுறுப்பைக் காட்டிலும், அதிக ஆர்வத்துடன் நடத்தி, ஆணவ பா.ஜ.க. ஆட்சி மற்றும் மாநிலத்தில் உள்ள அராஜக அதிமுக ஆட்சி ஆகியவற்றின் முகமூடியை மக்கள் மத்தியில் கிழித்தெறியும் வகையில் கழகத் தொண்டர்கள் முனைப்புடன்- முழு வீச்சில் பணியாற்றிட வேண்டும் என்றும்- ஒரு கோடி கையெழுத்து என்ன அதற்கு மேலும் பெற்றுவிட்டோம் என்ற வெற்றிச் செய்தியுடன் கையெழுத்துப் படிவங்கள்- அண்ணா அறிவாலயத்திற்கு அலைகளைப் போல வந்து மலைபோலக் குவிந்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications