For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை தினத்தில் கருணாநிதியை நினைவுகூர வேண்டும்.. ஸ்டாலின் ட்வீட்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த நகருக்கு சென்னை என்று, அனைத்து மொழிகளிலும் பெயர் மாற்றம் செய்த மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவை போற்றுவோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MK Stalin calls people to remember Karunanidhi

சென்னை தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், ஸ்டாலின் வெளியிட்ட ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

சென்னை என தமிழிலும், மெட்ராஸ் என ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் அழைக்கப்பட்டு வந்த நிலையை மாற்றி, "சென்னை" என அனைத்து மொழிகளும் பயன்படுத்திடும் வகையில், பெயர் மாற்றம் செய்து வரலாறு படைத்தவர் தலைவர் கலைஞர்! #ChennaiDay தலைவர் கலைஞர் அவர்களை நினைவூட்டும் மேலும் ஓர் அடையாளம்!

அண்ணா நகர், வள்ளுவர் கோட்டம், அண்ணா நூற்றாண்டுநூலகம், அண்ணா மேம்பாலம், டைடல் பூங்கா, செம்மொழிப் பூங்கா, தமிழ் இணையப் பல்கலைக்கழகம் என காலத்திற்கேற்ற நவீன வளர்ச்சியுடன் கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளங்களுக்கு வித்திட்ட தலைவர் கலைஞர் அவர்களை #ChennaiDay -இல் நினைவுகூர்வோம்!

இவ்வாறு ஸ்டாலின் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

English summary
MK Stalin calls people to remember Karunanidhi on Chennai Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X