For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாரணர் இயக்கத் தலைவராக எச்.ராஜாவா?.. தமிழக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்

சாரணர்- சாரணியர் இயக்கத் தலைவராக எச். ராஜாவை நியமிக்கும் அதிமுக அரசின் முடிவுக்கு திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் காவி கொள்கையை புகுத்தும் செயல்தான் சாரணர்- சாரணியர் இயக்கத் தலைவராக எச். ராஜாவை நியமிக்கும் அதிமுக அரசின் முடிவு என்று முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறுகையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை சாரணர்-சாரணியர் இயக்கத் தலைவராக நியமிக்க அதிமுக அரசு முடிவு செய்துள்ளது.

MK Stalin condemns ADMK government for appointing H.Raja as chief of scouts and guides

எச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உள்ளத்தில் நஞ்சு விதைக்க திரைமறைவில் முயற்சி என்று கல்வியாளர்கள் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மீது வருமான வரி சோதனை நடத்தியது பாஜக பதவி பெறவே என்ற ரகசியம் அம்பலம் ஆகியுள்ளது. ஊழல் அதிமுக அரசின் கொள்ளையில் நாங்களும் பங்குதாரர்கள் என்று பாஜக ஒப்புக் கொள்ளலாம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The ADMK government proposes to appoint H.Raja as Chief of Scouts and Guides. For this proposal MK Stalin condemns ADMK government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X