For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தடுத்து ரெய்டு... முதல்வர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்... ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்

முதல்வரின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆளுநரை இன்று ஸ்டாலின் சந்திக்கிறார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வரின் உறவினர்கள் வீட்டில் வருமான வரித் துறை ரெய்டு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்த ஸ்டாலின் வலியுறுத்தினார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்டர் செய்யாதுரை வீடு மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் ரூ170 கோடி ரொக்கம், 105 கிலோ தங்கம் உள்ளிட்டவை சிக்கியதாக கூறப்படுகிறது.

MK Stalin going to meet Governor Banwarilal Purohit

இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து ஸ்டாலின் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு ஸ்டாலின் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

அப்போது ஆளுநரிடம் புகார் மனுவை அளித்தார். அதில், சமீபத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், சோதனையோடு இதை விட்டுவிடாமல், உடனடியாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வருமான வரிச் சோதனை தொடர்பாக, நீதிமன்றத்தை நாடவும் தி.மு.க. திட்டமிட்டுள்ளது.

English summary
DMK Working President MK Stalin going to meet Governor Banwarilal Purohit regarding IT raids in Seiyyasurai's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X