மு.க.ஸ்டாலினை ஸ்டன் ஆக்கிய 94 வயது நன்னன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை தமிழறிஞர் மா.நன்னன் ஸ்டன் ஆக்கிவிட்டதாக பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன்.

இதுகுறித்து, மா.சுப்பிரமணியன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது அப்படியே உங்கள் பார்வைக்கு: மரியாதைக்குரிய முனைவர் மா.நன்னன் அவர்களை அறியாத தமிழ் ஆர்வலர்கள் யாரும் இருக்க முடியாது.

MK Stalin got stun while met Tamil scholer Nannan

உடல் நலம் குன்றியிருப்பதை அறிந்து நலம் விசாரிக்க சைதை தொகுதி ரங்கராஜபுரத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்தார் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி (ஸ்டாலின்) அவர்கள்.

அண்ணன் தளபதி அவர்களிடத்தில் மதிப்பிற்கினிய திரு.மா.நன்னன் அவர்கள் வைத்த கோரிக்கை,"எனக்கு 95 வயது தான் ஆகிறது....நினைவாற்றல் நன்றாக இருக்கிறது...இயக்கப்பணி ஆற்றிட என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.".... சுற்றி நின்ற நாங்களெல்லாம் வாயடைத்து நின்றோம்.

வாழ்க அன்பிற்கினிய அய்யா மா.நன்னன் அவர்கள்.. இவ்வாறு மா.சுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
MK Stalin got stun while met Tamil scholer Nannan as he was requesting Stalin to use him for the party works.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற