அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் - ஈபிஎஸ், ஓபிஎஸ், மு.க.ஸ்டாலின், வைகோ மரியாதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான அறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அண்ணாசாலையில் இருந்த அண்ணா சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

MK Stalin pays homage to Anna's Statue

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா சிலைக்கு டிடிவி தினகரன் இன்று மலர் தூவி மரியாதை செலுத்துவதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Dr. C.N.Annadurai's 109 Birthday Celebration on September 15, 2017. DMK working president MK Stalin paid homage to Anna's Statue.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற