For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016 சட்டசபை தேர்தல்... ஹீரோ அவதாரம் எடுத்த மு.க.ஸ்டாலின்...

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முடியட்டும், விடியட்டும் என்ற பெயரில், தி.மு.க., சார்பில், தேர்தல் பிரசார குறும்படம் எடுக்கப்படுகிறது. அதில், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், கதாநாயகனாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 28 .ஆண்டுகளுக்குப் பின்னர் கேமராவின் முன்பு ஒரு நடிகராக தலைகாட்டுகிறார் மு.க.ஸ்டாலின்.

தமிழ் சினிமாவில் நடித்த புகழ் பெற்று அரசியலில் நுழைந்தவர்கள்தான் அதிகம். அரசியல்வாதியான பின்னர் சினிமாவில் நடித்தவர் மு.க.ஸ்டாலின். 1987ல் வெளியான, 'ஒரே ரத்தம்' என்ற திரைப் படத்திலும், 1991ல் வெளியான, 'குறிஞ்சி மலர்' என்ற, 'டிவி' தொடரிலும், கதாநாயகனாக நடித்துள்ளார். இப்போது சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக மீனவ நண்பனாக, ரிக்ஷாகாரனாக, படகோட்டியாக, பல வேடங்களில் ஏழை தொழிலாளியாகவும் நடித்திரக்கிறாராம்.

 தாத்தா – மகன் - பேரன்

தாத்தா – மகன் - பேரன்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தமிழ் சினிமா உலகில் கதை, வசனம் எழுதி புகழ் பெற்றார். அவரது மூத்த மகன், மு.க.முத்து, 'பிள்ளையோ பிள்ளை, பூக்காரி' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இளைய மகனும், தி.மு.க., பொருளாளருமான ஸ்டாலின், சினிமா, சீரியல்களில் நடிக்க, மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதியும் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 கனிமொழி குறும்படம்

கனிமொழி குறும்படம்

கருணாநிதியின் மகளும் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலருமான கனிமொழி, சமீபத்தில் கருணாநிதியின், 92வது பிறந்த நாளை ஒட்டி, குறும்படத்தை தயாரித்தார். மாற்றுத் திறனாளிகளுடன் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடியதை மையமாக வைத்து, அந்த படம் தயாரிக்கப்பட்டது.கட்சி வட்டாரங்களில், இந்த படம் குறித்து, பரபரப்பாக பேசப்பட்டது.

 ஸ்டாலின் நடிப்பில் குறும்படம்

ஸ்டாலின் நடிப்பில் குறும்படம்

ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, தேர்தல் பிரசார குறும்படம், வேகமாக தயாராகி வருகிறது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, குடிநீர் பிரச்னை, விலைவாசி உயர்வு, மின் வெட்டு, மின் கட்டண உயர்வு, மதுவிலக்கு போராட்டம் உள்ளிட்ட பல பிரச்னைகளை மையமாக வைத்து, அந்த படம் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.

 படகில் பயணம்

படகில் பயணம்

கடந்த, இரு நாட்களாக, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஒரு 'தீம் பார்க்'கில், ஸ்டாலின் நடிக்கும் குறும்படம் படப்படிப்பு நடந்தது. படகில் பயணிப்பதுபோலவும் படமாக்கப்பட்டதாம். ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள்; அனல் பறக்கும் வசனங்களும் இந்த குறும்படத்தில் இடம் பெற்றுள்ளதாம்.

 பேரணிகள், மாநாடுகள்

பேரணிகள், மாநாடுகள்

தமிழகத்தின் துணை முதல்வராக ஸ்டாலின் பணியாற்றிய போது, அவர் கலந்து கொண்ட நலத் திட்ட நிகழ்ச்சிகள், கொளத்துார் தொகுதியில், அவர் நடத்தி வரும், 'மக்களின் கேள்வி நேரம்' கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், கட்சி பொதுக் கூட்டங்கள், சமீப காலமாக, மதுரை, கடலுார், திருப்பூரில், கட்சி சார்பில் நடத்தப்பட்ட மாநாடு பேரணிகளின் காட்சிகளின் தொகுப்புகளும், குறும்படத்தில் இடம் பெற்றுள்ளனவாம்.

 சீரியல் வெற்றி

சீரியல் வெற்றி

கருணாநிதி எழுத்தில் உருவான 'ஒரே ரத்தம்' என்ற திரைப்படத்தில் ஸ்டாலின் கதாநாயகனாக நடித்தார். ஆனால், அப்படம் ஸ்டாலினுக்கு பெயர் வாங்கித் தரவில்லை. அதே நேரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குறிஞ்சி மலர் என்ற தொடரில் கலெக்டராக ஸ்டாலின் நடித்தபோது அந்த தொடர் வரவேற்பைப் பெற்றது.

 சட்டசபைத் தேர்தலுக்கு

சட்டசபைத் தேர்தலுக்கு

இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்காக தயாராகும் குறும்படத்தில் மேக் அப் போட்டுள்ளார் ஸ்டாலின். படித்த வாக்காளர்களை சமூக வலைத்தளங்கள், செல்போன் ஆப்ஸ் மூலம் அட்டாக் செய்யும் ஸ்டாலின் படிக்காத பாமர வாக்காளர்களை குறும்படங்கள் மூலம் சந்திக்க தயராகிவிட்டார் என்கின்றனர் திமுகவினர். எப்படியோ 2016 சட்டசபை தேர்தல் களைகட்ட ஆரம்பித்துவிட்டது.

English summary
While actors have turned political leaders in the State, DMK treasurer MK Stalin is facing the cameras for a film shoot after three decades. Several scenes of the DMK youth wing leader riding a boat were shot by a crew which may show him in various roles to make him popular among all sections of people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X