முதல்வராக பதவியேற்ற விஜய்.. முதல்முறையாக மவுனம் கலைத்த த்ரிஷா.. என்ன சொல்லி இருக்காரு பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முதல்வராக நேற்றைய தினம் விஜய் பதவியேற்றுக் கொண்டார். விஜய்க்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே விஜய் முதல்வராகப் பதவியேற்றது தொடர்பாக நடிகை த்ரிஷா சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் விஜய் கலந்து கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசியலில் கடந்த ஒரு வாரமாக இருந்த அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. பெரும்பான்மைக்குத் தேவையான நம்பர்களை திரட்டிய விஜய், தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளார். தமிழ்நாடு முதல்வராக விஜய் நேற்றைய தினம் பதவியேற்றார். அவருக்குத் தமிழ்நாடு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Vijay Trisha

த்ரிஷா

தமிழக அரசியலில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்று ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ள நிலையில், நேரு ஸ்டேடியத்தில் நடந்த அந்த மெகா நிகழ்வில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்களில் முக்கியமானவர் நடிகை திரிஷா. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் முறைப்படி பதவியேற்ற அந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவியேற்பு விழாவிற்கு வந்திருந்த திரிஷா கடல் பச்சை நிறச் சேலையில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் இருந்த விஜய்யின் தாய் சோபாவை கட்டித்தழுவினார். விஜய் பதவியேற்பு விழா முடியும் வரையிலும் திரிஷா அங்கு தான் இருந்தார். இதற்கிடையே விஜய் முதல்வராகப் பதவியேற்றது தொடர்பாக அவர் பிரபல ஆங்கில ஊடகமான என்டிடிவிக்கு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாழ்த்து

விஜய் முதல்வராகப் பதவியேற்றுள்ளது தனக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறிய த்ரிஷா, இந்த புதிய பயணத்திற்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும், "ரொம்ப சந்தோஷமா இருக்கு... வாழ்த்துகள்" என அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். த்ரிஷா மட்டுமின்றி இந்த நிகழ்வில் ஜனநாயகன் தயாரிப்பாளர், ஏஜிஎஸ் தயாரிப்பாளர் அர்ச்சனா என சினிமா துறையில் இருந்து பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா

திரைப்படங்களில் விஜய் - திரிஷா ஜோடிக்கு எப்போதும் ஒரு தனி ரசிகர்கள் உண்டு. தமிழ் சினிமாவின் மிக சிறந்த ஆன்-ஸ்கிரீன் ஜோடிகளாகக் கருதப்படும் இவர்கள், கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் சமீபத்தில் வெளியான லியோ எனப் பல பிளாக்பஸ்டர் படங்களில் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டசபை

தமிழ்நாடு தேர்தலில் விஜய்யின் தவெக மொத்தம் 108 இடங்களில் வெற்றி பெற்றது. திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரு தொகுதிகளில் போட்டியிட்ட விஜய், இரண்டிலும் வெற்றி பெற்றிருந்தார். இதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக தொடர்கிறார். இன்றைய தினம் மொத்தம் உள்ள 233 பேரும் இன்று எம்எல்ஏக்களாக பதவியேற்கிறார்கள். அவர்களுக்குத் தற்காலிக ஆளுநர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+