For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் ஏன் அழைத்தார்.. எம்எல்ஏ விஜயதாரணி எழுப்பும் சந்தேகம்

பாஜக சொல்லித்தான் ஆளுநர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்துள்ளார் என்ற சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி இன்று முதல்வராக பதவி ஏற்றார். அவரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்ததில் சந்தேகம் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து விஜயதாரணி மேலும் கூறியதாவது:

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் பாஜக ஏதோ சொல்லித்தான், அவசரமாக எடப்பாடி பழனிச்சாமியை அழைக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இத்தனை நாட்களாக இழுத்தடித்த ஆளுநர் இப்போது எப்படி அழைத்தார் என்று தெரியவில்லை.

MLA Vijayadharani slams BJP

ஓபிஎஸ்ஸும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டிருந்தார். இரண்டு பேரும் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில் இருவரின் பெரும்பான்மையையும் நிரூபிக்க ஆளுநர் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். இப்போது, எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்பது திங்கள் கிழமை சட்டசபையில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினால்தான் தெரிய வரும்.

எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க தவறினால் இரண்டாவதாக இருக்கக் கூடிய ஓபிஎஸ்ஸுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம்.
இது ஒருபுறம் இருக்க, இந்த விழாவிற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை என்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.

English summary
Congress MLA Vijayadharani slammed BJP’s standing over Tamil nadu political issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X